முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

 • வெங்காயத்துக்கு ‘கியூ’; பரிதாப ‘ஹார்ட் அட்டாக்’

  ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் வெங்காயம் வாங்க நீண்ட வரிசையில் நின்ற ஒருவர் மாரடைப்பில் பலியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடுமுழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதையடுத்து, பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெங்காயத்தின் தற்போது வெளி சந்தையில் ரூ.200 வரை உயர்ந்துள்ள நிலையில், ஆந்திர மாநில அரசு மானிய விலையில் ரூ.25க்கு விற்பனை செய்யும் அரசு சார்பில் கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், ஆந்திரா மாநிலம், குடிவாடாவில் உள்ள ரைட் பஜாரில் அமைக்கப்பட்டிருந்த வெங்காய கடையில் ரூ.25க்கு வெங்காயம் வாங்க நீண்ட

  READ MORE
 • ‘என்இஎப்டி’ இனி 24 மணி நேரம்

  மும்பை: வங்கிகள் மூலம் ஆன்லைன் பணப்பரிமாற்றமான என்இஎப்டி முறை இனி 24 மணி நேரமும் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், ஆன்லைன் பணப்பரிமாற்றமான நேஷ்னல் எலக்ட்ரானிக் பண்ட் டிரான்ஸ்பர் (என்இஎப்டி) வரும் டிசம்பர் 16ம் தேதி முதல் 24 மணி நேரமும் அனைத்து நாட்களிலும் பணப்பரிமாற்றம் நடைபெறும் எனவும், அதாவது, 15ம் தேதி இரவு 12.30 முதல் தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது. ஏற்கனவே வார நாட்களில் காலை 8 மணி முதல் இரவு

  READ MORE
 • டான்ஸ் நிறுத்திய பெண்; துப்பாகிச்சூடு கொடூரம்

  கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய பெண் மீது துப்பாக்கியால் சுட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் அருகே உள்ள சித்ரகூட் பகுதியில், ஊராட்சி மன்ற தலைவர் சுதிர் சிங் படேல் மகளின் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இசை மற்றும் நடனக் கச்சேரி நடைபெற்றது. மேடையில் நடனக்குழுவைச் சேர்ந்த ஹினா என்ற இளம்பெண் ஆடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு நபர் குடிபோதையில், அங்குள்ளவர்களை துப்பாக்கியால் சுடப்போகிறேன் என தெரிவித்தார். உடனே அதிர்ந்துபோன டான்சர்

  READ MORE
 • டிரம்ப் பதவி நீக்கம்; தீர்மானத்துக்கு அனுமதி

  வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்குஅந்நாட்டு நாடாளுமன்றத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் எதிரிகளை பழி வாங்குவதற்காக அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக அதிபர் டொனால்டு டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்தது. நீண்ட நாட்களாக எம்பிக்கள் குழுவில் விசாரணை நடைபெற்ற நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி இதற்கான தீர்மானத்துக்கு அனுமதித்துள்ளார். இந்நிலையில், தன் மீதான தீர்மானத்தை செனட் சபையில் எதிர் கொள்ளப்போவதாக அதிர்பர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

  READ MORE
 • திட்டமிட்டபடி 27,30ல் உள்ளாட்சி தேர்தல்

  சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து, திட்டமிட்டபடி 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 9 மாவட்டங்களை தவிர்த்து, தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் வரும் 19ம் தேதி. உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஜனவரி 2ம் தேதி

  READ MORE
 • தீப திருவிழா; ஆன்லைன் டிக்கெட் துவக்கம்

  திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசன கட்டண ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. திருவணணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் 10ம் தேதி, மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. பக்தர்களின் வசதிக்கான தமிழக அரசு சிறப்பு பஸ்களை அறிவித்துள்ளது. இந்நிலையில், பக்தர்களுக்காக ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பரணி தீபம், மகா தீப தரிசனத்திற்கு தனித்தனியே ரூ.500, ரூ.600 மதிப்பிலான டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெறலாம். http://arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.

  READ MORE
 • ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு

  ஒசூர்: ஓசூர் அருகே செம்மறி ஆட்டை மலைப்பாம்பு ஒன்று விழுங்க முயன்றதால், ஆடு பரிதாபமாக உயிரிழந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஒன்னல்வாடி அருகே உள்ள ஜோதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி(52), இவர் 30க்கும் அதிகமான செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல இன்றும், ஜோதிபுரம் கிராமத்தின் பின்புறமாக உள்ள வயல்பகுதிகளை செம்மறி ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். அனைத்து ஆடுகளும் அலறியடித்து ஓடியநிலையில், ஒரு ஆட்டினை பிடித்த மலைப்பாம்பு உடல்முழுவதும் சுற்றியவாறு உடலை நெறுக்கி உள்ளது,

  READ MORE
 • ஜெ., நினைவிடத்தில் தீபா அஞ்சலி

  சென்னை: ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜெ.தீபா இன்று அஞ்சலி செலுத்தினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தன்னுடைய அத்தையான ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தினர். உடன் அவரது கணவர் மாதவன் மற்றும் சகோதரர் தீபக் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

  READ MORE
 • அரசகுமார் திமுகவில் இணைந்தார்

  சென்னை: பா.ஜ., மாநில துணைத்தலைவர் அரசகுமார் இன்று திமுகவில் இணைந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜ., மாநில துணைத் தலைவர் அரசகுமார், ஸ்டாலின் முதல்வராக நிச்சயம் வருவார் என திமுகவுக்கு ஆதரவாக பேசினார். இதனால் கோபமடைந்த கட்சி தலைமையகம் அவரை கட்சியிலிருந்து தற்காலிகாக நீக்கியுள்ளதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், அரசகுமார் இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

  READ MORE
 • விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த தமிழனுக்கு பாராட்டு

  சென்னை: விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய சென்னையை சேர்ந்த சண்முக சுப்பிரமணியனை அழைத்து தமிழக முதல்வர் பாராட்டு தெரிவித்தார். இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய ‘சந்திராயன் 2’ விலிருந்து நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் கடைசி 3 நிமிடங்களில் காணாமல் போனது. இதனையடுத்து, நாசாவின் உதவியுடன் இஸ்ரோ விக்ரம் லேண்டரை தேடி வந்தது. இந்நிலையில், கடந்த செப்டம்பரில் காணாமல் போன விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களை நாசா கண்டுபிடித்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருப்பது

  READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு