முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்த டிடிவி தினகரன்

  • In Chennai
  • September 23, 2020
  • 102 Views
முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்த டிடிவி தினகரன்

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இன்று காலை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட மின் தடை காரணமாக ஆக்சிஜன் வழங்குவதில் தடை ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவதிப்பட்டதாகவும் அந்த ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 3 பேர் மூச்சு திணறி உயிரிழந்தாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்துள்ள டி.டி.வி தினகரன், “திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் இருவர் மின்தடையால் ஆக்சிஜன் செலுத்த முடியாமல் உயிரிழந்த நிகழ்வு கடும் அதிர்ச்சியளிக்கிறது.ஏற்கனவே நோயின் வீரியத்தால் நாள்தோறும் உயிரிழப்புகள் ஏற்பட்டுவரும் நிலையில்,நிர்வாக அலட்சியத்தால் இப்படி அநியாயமாக உயிர்கள் பறிபோவதை ஏற்கமுடியாது.இதற்குக் காரணமானவர்கள்மீது தமிழ்நாடு முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கூடுதலாக இழப்பீடு வழங்கவேண்டும்.

தமிழகத்தில் இனி இத்தகைய சம்பவம் நிகழாமல் தடுக்கத் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத்துறை அனுப்பிட வலியுறுத்துகிறேன்” என கூறியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்