20 வயது பெண் ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளை பெற்றெடுத்த அதிசயம்

  • In Chennai
  • October 23, 2020
  • 201 Views
20 வயது பெண் ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளை பெற்றெடுத்த அதிசயம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்-இசக்கியம்மாள் தம்பதியினர். இசக்கியம்மாள் கர்ப்பமாக இருக்கும் நிலையில் பிரசவத்திற்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்தபோது அவரது வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பது உறுதியானது. ஆனால் பெண்ணின் உடல் நிலை மோசமாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இளம் பெண்ணிற்கு இரண்டு ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தையும் பிறந்தது.குழந்தையின் எடை குறைவாக இருப்பதால் இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் கூறுகையில் தற்போது தாய் மற்றும் குழந்தைகளின் உடல்நிலை சீராகி வருவதாக தெரிவித்துள்ளனர். தாயையும் நான்கு குழந்தைகளையும் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்