முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • அதிமுக முன்னாள் கவுன்சிலர் சிக்கியது எப்படி

    ஓசூர்: சென்னை, குரோம்பேட்டை சாலையில் கடந்த 12ம் தேதி சுபஸ்ரீ 23, என்ற பெண் வேலை முடிந்து வீட்டுக்கு இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பள்ளிக்கரணையில் சாலையின் நடுவில் இருந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறியது. இதில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம்

    READ MORE
  • புதுச்சேரி இடைத்தேர்தல்.. காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

    புதுச்சேரி: புதுவையில் காலியாக உள்ள காமராஜ் நகர் தொகுதிக்கு அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் வேட்பாளரை இறுதி செய்வதற்காக புதுவை காங்கிரசார் டெல்லியில் முகாமிட்டனர். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் முகுல்வாஸ்னிக், செயலாளர் சஞ்சய்தத் ஆகியோரிடம் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் முதலமைச்சரின் ஆதரவாளரான ஜான்குமாருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    READ MORE
  • ஆம்புலன்ஸில் பிரசவம்

    தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தொழுமலை கிராமத்தில் வசிப்பவர் கஞ்சப்பா. இவரின் 19 வயது மகளான நேத்ராவுக்கு நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டது. தகவலின் பேரில் உடனடியாக ஆம்புலன்ஸ் அங்கு வந்தது. பின்னர், மருத்துவ உதவியாளர். ஜெகன் மற்றும் ஓட்டுநர். குமார் விரைந்து சென்று தொழுமலை கிராமத்திலிருந்து கர்ப்பிணியுடன் புறப்பட்ட ஆம்புலன்சில், காட்டுப்பகுதியில் வரும்போது 12.05 மணிளவில் ஆம்புலன்ஸிலேயே பிரசவம் ஆனது. நேத்ராவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் காட்டுப்பகுதியில் இருந்து சுமார்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு