புதுச்சேரி இடைத்தேர்தல்.. காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

புதுச்சேரி இடைத்தேர்தல்.. காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

புதுச்சேரி:
புதுவையில் காலியாக உள்ள காமராஜ் நகர் தொகுதிக்கு அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

காங்கிரஸ் வேட்பாளரை இறுதி செய்வதற்காக புதுவை காங்கிரசார் டெல்லியில் முகாமிட்டனர்.

அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் முகுல்வாஸ்னிக், செயலாளர் சஞ்சய்தத் ஆகியோரிடம் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இறுதியில் முதலமைச்சரின் ஆதரவாளரான ஜான்குமாருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்