முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

    ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே ஏரியில் குளித்த இரு சிருவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கீழ்மத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர்கள் திலீப்குமார் மற்றும் மணிகன்டன் என்ற சிறுவர்கள். இவர்கள் இருவரும் கீழ்மத்தூர் கானாறு ஏரியில் குளித்து கொண்டிருக்கும்போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    READ MORE
  • பேரானந்தம் பிரதமர் அவர்களே

    சென்னை: அமெரிக்காவில் பிரதமர் மோடி ஐநா சபையில் உரையாற்றினார். அப்போது அவர் உலகத்தில் பல்வேறு நாடுகள் இருந்தாலும் மனிதர்கள் அனைவரும் ஒரே இனம்தான். உலகின் மூத்த மொழி தமிழ் ஆகும். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று புலவர் கணியன் பூங்குன்றனார் தெரிவித்துள்ளார் என்று பேசினார். இந்நிலையில், பிரதமர் மோடி ஐநா சபையில் தமிழில் பேசியதற்காக, வைரமுத்து ட்விட்டரில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளதாவது: ஐநா சபையில் தமிழ் சொன்னீர்கள் பேரானந்தம் பிரதமர்

    READ MORE
  • மக்களே சரிசெய்யும் சாலை

    தர்மபுரி: பலமுறை மனுகொடுத்தும் சரிசெய்யாத ஓகேனக்கல் சாலையை மக்களே சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தின் புகழ் பெற்ற சுற்றுலா தளம் ஒகேனக்கல். நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சுற்றுலா தளத்திற்கு வந்து செல்கின்றனர். ஆனால் ஒகேனக்கல் முதல் நாட்ராம்பாளையம் வரை, உள்ள சாலை வாகனங்கள் வந்து செல்ல முடியாத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை சீர்படுத்த கோரி பலமுறை மக்கள் போராடியும், மனு கொடுத்தும் அரசு எவ்வித நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக மக்களை திரட்டி

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு