அதிமுக முன்னாள் கவுன்சிலர் சிக்கியது எப்படி

அதிமுக முன்னாள் கவுன்சிலர் சிக்கியது எப்படி

ஓசூர்:
சென்னை, குரோம்பேட்டை சாலையில் கடந்த 12ம் தேதி சுபஸ்ரீ 23, என்ற பெண் வேலை முடிந்து வீட்டுக்கு இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பள்ளிக்கரணையில் சாலையின் நடுவில் இருந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் சுபஸ்ரீ மீது விழுந்தது.

இதில் வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறியது.

இதில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், சுபஸ்ரீ உயிர் இழப்புக்கு காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

தண்ணீர் லாரி டிரைவர் மனோஜை போலீசார் கைது செய்தனர். பேனர் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து ஜெயகோபாலை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர்.
போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனை அறிந்த ஜெயகோபால் தலைமறைவானார்.

ஜெயகோபாலை கைது செய்வதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர்.

அவரது செல்போன் டிஜிட்டல் பணபரிமாற்றம் ஆகியவற்றை போலீசார் கண்காணித்தனர். நேற்று அவர் திருச்சி, தர்மபுரி, ஒகேனக்கல் பகுதிகளுக்கு சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து 2 தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் அடுத்த இஸ்லாம்பூர் என்ற இடத்தில் இருக்கும் தனியார் விடுதியில் ஜெயகோபால் தங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

அதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் ஜெயகோபாலை கைது செய்தனர்.

அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் 16 நாட்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்