முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • தர்மபுரியில் 21 நாட்கள் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

    இண்டூர்: தர்மபுரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருப்பதற்காக தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) ராஜேந்திரன் கால்நடை பராமரிப்புத் துறை அவர்களின் தலைமையில் தர்மபுரி மாவட்டத்தில் 14.10.2019 முதல் 3.11.2019 வரையிலான 21 நாட்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறுகிறது. அருர் கோட்டத்தில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமில் கால்நடை மருத்துவர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒரு பகுதியாக நல்லம்பள்ளி வட்டம், இண்டூர் கால்நடை மருத்துவமனைக்குட்பட்ட பேடறஅள்ளி கிராமத்தில் தடுப்பூசி முகாம்

    READ MORE
  • கெலமங்கலம் பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு.. உதவி இயக்குனர் நேரில் ஆய்வு

    ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பேரூராட்சியில் தர்மபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜிஜா பாய் மேற்பார்வையில் டெங்கு ஒழிப்பு பணிகள் மற்றும் சந்தை மேம்பாட்டு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. டெங்கு பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்தார் மாரியம்மன் கோயில் தெரு, சௌடேஸ்வா கோயில் தெரு, பட்டாளம்மன் கோயில் தெரு, எம்.ஜி.ரோடு ஆகிய பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகளையும் மேலும் சந்தை மேம்பாட்டு பணிகளையும் ஆய்வு செய்தார். பேருராட்சி செயல் அலுவலர் நாகராஜ்

    READ MORE
  • நீட் கோச்சிங் சென்டரில் சோதனை.. கணக்கில் வராத பணம் கண்டுபிடிப்பு

    நாமக்கல்: நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்வி நிறுவனம் மற்றும் நீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நீட் பயிற்சி அளிக்கும் மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு புகாரில் நாமக்கல், பெருந்துறை, கரூர், சென்னை உட்பட 17 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இதில் ரூ.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது. மேலும், கணக்கில் வராத ரொக்கமாக ரூ.150 கோடி பணம்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு