கெலமங்கலம் பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு.. உதவி இயக்குனர் நேரில் ஆய்வு

கெலமங்கலம் பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு.. உதவி இயக்குனர் நேரில் ஆய்வு

ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பேரூராட்சியில் தர்மபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜிஜா பாய் மேற்பார்வையில் டெங்கு ஒழிப்பு பணிகள் மற்றும் சந்தை மேம்பாட்டு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

டெங்கு பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்தார் மாரியம்மன் கோயில் தெரு, சௌடேஸ்வா கோயில் தெரு, பட்டாளம்மன் கோயில் தெரு, எம்.ஜி.ரோடு ஆகிய பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகளையும் மேலும் சந்தை மேம்பாட்டு பணிகளையும் ஆய்வு செய்தார்.

பேருராட்சி செயல் அலுவலர் நாகராஜ் இளநிலை உதவியாளர் சீனிவாசன் சுகாதா ஆய்வாளர் நாகேந்திரன் துப்புரவு பணியாளர்கள் மஸ்தூர் பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்