தர்மபுரியில் 21 நாட்கள் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

தர்மபுரியில் 21 நாட்கள் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

இண்டூர்:
தர்மபுரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருப்பதற்காக தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) ராஜேந்திரன் கால்நடை பராமரிப்புத் துறை அவர்களின் தலைமையில் தர்மபுரி மாவட்டத்தில் 14.10.2019 முதல் 3.11.2019 வரையிலான 21 நாட்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறுகிறது.

அருர் கோட்டத்தில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமில் கால்நடை மருத்துவர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஒரு பகுதியாக நல்லம்பள்ளி வட்டம், இண்டூர் கால்நடை மருத்துவமனைக்குட்பட்ட பேடறஅள்ளி கிராமத்தில் தடுப்பூசி முகாம் இன்று (14ம் தேதி) நடைபெற்றது.

இம்முகாமில் எருமை மாடுகள், பசு மாடுகள் ஆகியவற்றுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இந்த முகாமில் கால்நடை மருத்துவர் கே.தசரதன் மற்றும் மருத்துவர் தென்னரசு இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் தர்மபுரி அவர்களின் தலைமையில், பயிற்சி கால்நடை மருத்துவர்கள் கோகுல், தீபேஷ், எபன் டைட்டஸ் , இம்முகாமில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்