முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை!

    சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதுனால், பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், வடபழனி, மீனம்பாக்கம், வேளச்சேரி, அமைந்தகரை , மேடவாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த இடியுடன் மழை பெய்து வருகிறது. மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்

    READ MORE
  • ரயில் மூலம் தண்ணீர்..! ஜோலார்பேட்டையில் ஆய்வு..!!

    சென்னை: ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீரை கீழ்பாக்கத்திற்கு கொண்டுசெல்ல அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை போக்க ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னை ஐசிஎப்புக்கு வரும் தண்ணீரை, கீழ்பாக்கத்துக்கு குழாய்கள் மூலம் எடுத்துச்செல்வது குறித்து அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இதே போல வேலூரிலும், மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் இருக்கும் காவேரி கூட்டு குடிநீர் தரைத்தோட்டியில் இருந்து குழாய்கள் அமைத்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வருவது சாத்தியமா என்பது குறித்து சென்னை

    READ MORE
  • கார் மீது கண்டெய்னர் மோதல்; 3 பேர் பலி!

    திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 3 பேர் பலியாகியுள்ளனர். சென்னையை அடுத்த பம்மலையை சேர்ந்தவர் சாய் சந்திரசேகர். இவர் தனது மனைவி புஷ்கலா மற்றும் 2 மகன்களுடன் திருப்பதி சென்றிருந்தார். சாமி தரிசனம் முடித்துவிட்டு காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். திருவள்ளூர் நாராயணபுரம் கூட்ரோடு வரும்போது, கண்டெய்னர் லாரி ஒன்று அவர்கள் மீது மோதியது. சாய்சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே பலியானார். மனைவி புஷ்கலா, மகன் சாய் தருண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு