முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • வட தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை!

    சென்னை: வட தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது மழை பெய்துவருவது குறிப்பிடத்தக்கது.

    READ MORE
  • கொத்தமல்லி கிலோ ரூ.250..! மதுரை மக்கள் அதிர்ச்சி..!!

    மதுரை: மதுரையில் கொத்தமல்லி விலை கிலோ ரூ.250க்கு விற்பனை செய்வதால் மதுரை மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். போதிய மழையின்மையால் வறட்சி நிலவி வருவதால் கொத்தமல்லியின் தேவை அதிகரித்துள்ளதாலும் அதன் விலை தற்போது அதிகரித்துள்ளது. மதுரை சிறு வியாபாரிகள் கூறுகையில், சமையலுக்கு இன்றியமையாததாக தேவைப்படும் கொத்தமல்லியின் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களிடம் வாக்குவாதம் செய்து வியாபாரம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், சென்னை கோயம்பேட்டிலும் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை இன்று அதிகமாக காணப்படுகிறது.

    READ MORE
  • போலீஸ் லத்தி சார்ஜ்..! கைக்குழந்தையுடன் தம்பதி கதி..!!

    மதுரை: மதுரையில் வியாபாரி விவேகானந்த குமார் கடந்த 15ம் தேதி இரண்டு சக்கர வாகனத்தில் சென்றபோது போலீசார் லத்தி வீசி தாக்கியதில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், விவேகானந்த குமாரின் மனைவி கஜபிரியாவும், கணவரின் மரணத்தை தாங்கி கொள்ள முடியாமல் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கஜபிரியா மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு