யூடியூப் சேனல்களை முடக்கிய கூகுள்

யூடியூப் சேனல்களை முடக்கிய கூகுள்

ஹாங்காங்:

ஹாங்காங் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் சீனாவின் தூண்டுதலின் பேரின் செயல்பட்டு வந்ததாக 210 யூடியூப் சேனல்களை கூகுள் நிறுவனம் முடக்கியுள்ளது.

ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ஐஎஸ் தீவிரவாதிகளோடு ஒப்பிட்டும், சமூகத்தின் கரப்பான் பூச்சிகள் போல் சித்தரித்தும் யாரோ பின்னணியில் இருந்து இயக்குவதுபோல் செயல்பட்டுவந்த சுமார் 1,000 கணக்குகளை பேஸ்புக் நிறுவனமும், 2 லட்சம் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் முடக்கியது.

மேலும் அதே புகாரின் பேரில் ஹாங்காங் போராட்டத்துக்கு எதிராக ஒருங்கிணைக்கப்பட்டது போன்ற கருத்து கூறி வந்த 210 யூடியூப் சேனல்களை கூகுள் நிறுவனம் முடக்கியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்