அனாதையாக கிடந்த பர்சை போலீசில் ஒப்படைத்த வங்கி ஊழியர்

அனாதையாக கிடந்த பர்சை போலீசில் ஒப்படைத்த வங்கி ஊழியர்

திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நெடுஞ்சாலையில் கேட்பாரற்று கிடந்த மணிபர்சை வங்கி தற்காலி ஊழியர் போலீசில் ஒப்படைத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடத்துள்ள முருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் 28, இவர் ஸ்டேட் வங்கியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.

வேலை நிமித்தமாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருத்தணி, சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் ஒரு மணிபர்ஸ் கீழே கிடந்துள்ளது.

உடனடியாக காரை நிறுத்தி அதனை எடுத்துள்ளார்.

அதில் ரூ.14,303, ஏ.டி.எம்., ஆதார் கார்டு போன்றவை இருந்துள்ளன. இதனையடுத்து உடனடியாக திருத்தணி காவல் நிலையத்தில் உள்ள சப்,இன்ஸ்பெக்டர் சரவணனிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து பர்ஸில் இருந்த விலாசம் மற்றும் போன் நம்பர் இருந்துள்ளது.

அதை தொலைத்தவர் திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்துள்ள அம்மனேரியை சேர்ந்தவர் தன்ராஜ் என்பது தெரியவந்துள்ளது.

அவரை போலீசார் தொடர்பு கொண்டு காவல் நிலையத்துக்கு வருமாறு அழைத்துள்ளனர். அவர் வந்த பிறகு வங்கி ஊழியர் முன்னிலையில் மணிபர்ஸை ஒப்படைத்தனர்.

இந்த சம்பவத்தால் வங்கி ஊழியருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்