‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் தேதி

  • In Cinema
  • November 4, 2019
  • 202 Views
‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் தேதி

சென்னை:

பல தடைகளைத் தாண்டி ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் -மேகா ஆகாஷ் ஜோடியா நடித்துள்ள படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்ட’. இந்த படம் கடந்த 2018ம் ஆண்டே படப்பிடிப்பு முடிந்த நிலையில், பணப் பிரச்னை, வழக்கு உள்ளிட்ட பிரச்ச¬னைகளை சந்தித்து வந்தது.

இந்த படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ் அளித்தும், பேச்சுவார்த்தைகள் மூலம் படத்தை ரிலீஸ் செய்ய பல்வேறு முயற்சிகள் நடந்து வந்தன. கடந்த செப்டம்பர் 6ம் தேதியே வெளியாக இருந்தநிலையில் படத்தை வெளியிட முடியவில்லை.

இந்நிலையில், பல இடையூறுகளைத் தாண்டி வரும் 26ம் தேதி ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்