அமைச்சரவை விரிவாக்கம்; சித்தராமையா கண்டனம்

அமைச்சரவை விரிவாக்கம்; சித்தராமையா கண்டனம்

பெங்களூரு:

கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து எடியூரப்பா தலைமையில் பாஜக புதிய அரசு அமைத்தது.

பாஜக பதவி ஏற்றபோது, எடியூரப்பா மட்டும்தான் பதவி ஏற்று கொண்டார். அமைச்சரவை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ஒருவாரத்திற்கு மேலாகியும் இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருக்கிறது.

இதற்கு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சித்தராமையா கூறுகையில் ‘‘இதற்கு முந்தைய அரசு மெஜாரிட்டியை நிரூக்க வேண்டும் என கவர்னர் கடிதம்மேல் கடிதம் அனுப்பினார்.

தற்போது பல்வேறு மாவட்டங்கள் வறட்சி மற்றும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் ஒருவர் மட்டுமே இருக்கும் நிலையில் அங்குள்ள மக்களின் நிலை குறித்து அவர் அறிந்திருக்கவில்லையா?

தற்போது வரை நிர்வாக இயந்திரம் முடங்கிப்போகியுள்ளது.

இது ஜனநாயகமா? சர்வாதிகாரமா? எடியூரப்பா முதல்வராக எப்படி துடித்தாரோ, அதேபோல் அமைச்சரவை விரிவாக்கத்திற்கு ஏன் அவசரம் காட்டவில்லை.’’ என்று தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்