வரும் 6ம் தேதி மோடியை சந்திக்கிறார் எடியூரப்பா

வரும் 6ம் தேதி மோடியை சந்திக்கிறார் எடியூரப்பா

புதுடெல்லி:

கர்நாடக முதல்வர் எடியூரப்பா வரும் 6ம் தேதி, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

கர்நாடகா மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பா.ஜ., மாநில தலைவர் எடியூரப்பா பதவியேற்றார். ஆனால், இதுவரை அமைச்சரவையில் முதல்வர் எடியூரப்பா மட்டுமே இடம்பெற்றுள்ளார்.

கர்நாடக அமைச்சரவை விஸ்தரிக்கப்படாத நிலையில், முதல்வர் எடியூரப்பா வரும் 6ம் தேதி டெல்லி செல்கிறார். அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்