உலகின் ‘மிக மிக ஆபத்தான லேப்டாப்’ ரூ.7.09 கோடிக்கு ஏலம்!

உலகின் ‘மிக மிக ஆபத்தான லேப்டாப்’  ரூ.7.09 கோடிக்கு ஏலம்!

நியூயார்க்:

உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் வைரஸ்களை பரப்பி பல மில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் உலகிலேயே மிக மோசமான லேப்டாப் தற்போது நியூயார்க் நகரில் ஏலம் விடப்பட்டு வருகிறது.

இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் 1.2 மில்லியன் டாலர்கள், அதாவது, இந்திய மதிப்பில் 7.09 கோடி ரூபாய் ஏலம் நடந்து வருகிறது.

‘தி பெர்சிஸ்டென்ஸ் ஆப் கேயாஸ்’ என்பது 6 வைரஸ்களை கொண்ட லேப்டாப். இதுவரை 95 பில்லியன் அளவுக்கு நிதி நஷ்டத்தை ஏற்படுத்தியதாகும். இது விண்டோஸ் எக்ஸ்பி சர்வீஸ் பேக் 3ல் இயங்கும் 14 ஜிபி ஸ்டோரேஜ், 2008ம் ஆண்டின் சாம்சங் என்சி10 லேப்டாப் ஆகும்.

இந்த லேப்டாப்பால் உலகளவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களை பாதிப்படைய வைப்பது குறிப்பிடத்தக்கது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்