கிரிக்கெட்டில் சாதனை படைத்த இலங்கை பெண்

  • In Sports
  • September 30, 2019
  • 163 Views
கிரிக்கெட்டில் சாதனை படைத்த இலங்கை பெண்

இலங்கை பெண்கள் அணியின் கேப்டன் சமாரி அதபத்து 66 பந்துகளில் 113 ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் 3டி 20 பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
இதில் ஆஸ்திரேலிய & இலங்கை அணிகள் மோதுகின்றன.

முதல் டி20 போட்டி சிட்னியில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 217 ரன்களை அடித்தது. ஆஸ்திரேலிய அணியின் மோனி 113 ரன்கள் அடித்தார்.

இதனைதொடர்ந்து 218 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் இலங்கை தோல்வியடைந்தாலும் அணியின் கேப்டன் 2 சாதனைகளை படைத்துள்ளார்.

இலங்கை அணியின் கேப்டன் சமாரி அதபத்து 66 பந்துகளில் 113 ரன்களை அடித்தார். டி20 போட்டியில் சதம் அடித்த முதல் பெண் கிரிக்கெட் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்