‘உடம்பில் லக்கேஜ்’ வேடிக்கை வைரல்

  • In General
  • October 18, 2019
  • 221 Views
‘உடம்பில் லக்கேஜ்’ வேடிக்கை வைரல்

புதுடெல்லி:

விமானப் பயணத்தின்போது அதிகப்படியான பொருட்களால் பெரும்பாலும் அபராதம் விதிக்கப்படுவது வழக்கமானதுதான். அப்படியிருந்தும், அதிலிருந்து தப்பிக்க ஒருவர் புதுமையான அணுகுமுறைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜெல் ரோட்ரிக்ஸ் என்பவர், விமான நிலையத்தில் உள்ள செக்இன் கவுன்டருக்கு வந்தபோது, நிர்ணியிக்கப்பட்டதைவிட அளவுக்கு அதிகமாக லக்கேஜை எடுத்து வந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கான கட்டணத்தை தவிர்க்க அவர், தனது லக்கேஜிலிருந்த 2.5 கிலோ துணிகளை அவரது உடம்பில் மாட்டிக்கொண்டு சென்றுள்ளார்.

இதனை படம்பிடித்த சக பயணி, அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வேடிக்கையான புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது வரை 33 ஆயிரம் லைக்குள் மற்றும் 20 ஆயிரம் ஷேர்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்