டயர் இல்லாமல் தரையிறங்கிய விமானம்!

டயர் இல்லாமல் தரையிறங்கிய விமானம்!

யங்கூன்:

மியான்மரில் விமானம் ஒன்று முன் பக்க டயர் இல்லாமல் தரையிறங்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

யூபி103, எம்ப்ரேர்190 வகையை சேர்ந்த மியான்மர் ஏர்லைன்ஸ் விமானம், மண்டேலே நகரில் 89 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்லும் நகரில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து விமான நிலைய போக்குவரத்த துணை இயக்குனர் தெரிவிக்கையில், தரை இறங்குவதற்கு தேவையான கியரை பைலட் போடுவதற்கு பல முறை முயன்றும் அது செயல்படவில்லை. அதனாலேயே அவசரமாக தரை இறக்கப்பட்டது. என்றார்.

இந்த சம்பவத்தில், பயணிகள் அனைவரும் காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்