உலகை மற்றொரு பெருந்தொற்று தாக்கும் – உலக சுகாதார மையம் எச்சரிக்கை .!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கும் நிலைகள் அடுத்த தொற்றை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீள்வதற்கு உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த சூழலில் கொரோனாவை போல புதிய கொள்ளை நோய்கள் எதிர்காலத்தில் தாக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ரெட்ரோஸ் எச்சரித்துள்ளார். இவற்றை சமாளிக்க உலக நாடுகள் பொதுச் சுகாதாரத்தில் அதிக அளவு முதலீடுகள் செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். கொரோனவைரஸ் உலகின் கடைசி பிறந்தொற்று அல்ல எனக் குறிப்பிட்டுள்ள அவர் பெருந்தொற்றுகள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறி இருப்பதை வரலாறு நமக்கு உணர்த்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.அடுத்த பெருந்தொற்று உலகை தாக்கும் போது அதனை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்று டெட்ரோஸ் எச்சரித்துள்ளார். மருத்துவத் துறையில் முன்னேறி இருக்கும் நாடுகள் கூட அடிப்படை பொது சுகாதாரத்துறை கட்டமைப்பில் கவனம் செலுத்தாமல் புறக்கணித்து இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொள்ளை நோய்களை சமாளிக்க அடிப்படையாக இருக்கும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்