தம்பிதுரை எங்கே? அதிமுக தொண்டர்களே கிசுகிசுப்பு

தம்பிதுரை எங்கே? அதிமுக தொண்டர்களே கிசுகிசுப்பு

கொரோனா வைரஸ் உலகநாடுகளை மிரட்டி வரும்நிலையில், அனைவரும் இயல்பு வாழ்க்கை பாதிப்படைத்து வீடுகளில் முடங்கி உள்ளனர்.

மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை முதலில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அதனை மே 3வரை அதிகரித்து அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உள்ளநிலையிலும்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வருவாயின்றி தவிக்கும் ஏழை எளியோருக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.

குறிப்பாக அதிமுகவில், முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான கேபி.முனுசாமி ஆதரவாளர்கள் Vs மாவட்ட செயலாளர், மு.அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி என இருவரும் சமநிலையில் மாறி மாறி உதவிகளை வழங்கி வருகின்றனர்.

ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏராளமான பள்ளிகள், கலைக்கல்லூரிகள், வேளாண்மை கல்லூரி, மருத்துவக்கல்லூரி என தனது எல்லாவிதமான கிளைகளை தொடங்கி உள்ள அதிமுக எம்பியும், முன்னாள் துணை சபாநாயகருமான தம்பிதுரை இதுவரை அவர் இருக்கும் இடமே தெரியவில்லை

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தம்பிதுரை கரூரில் பலமுறை எம்பியானாலும், கடந்தமுறை நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஜோதிமணியிடம் 5 லட்சம் வாங்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கேபி.முனுசாமிக்கும் சொந்த மாவட்டமாக உள்ளநிலையில், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில் அறிமுகமில்லாத காங்கிரஸ் கட்சி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தாலும் மாவட்டம் முழுவதும் பம்பரமாய் சுழன்று உதவிகளை செய்து வருகிறார்.

ஏராளமான பள்ளி நிறுவனங்களை ஒசூர் பகுதிகளில் நிறுவிய தம்பிதுரை ஏழை,எளியோர், தினக்கூலிகளின் பிள்ளைகள் கல்லூரியில் சேர்ப்பதால் பணத்தை மட்டுமே பெற்று லாபம் பார்த்த அவர்,

இந்த நேரத்தில் அந்த ஏழை எளியோரின் நலனில் அரசியல்வாதியாக கூட அக்கறை கொள்ளாமல் இருப்பது ஏன் என அதிமுகவினருக்குள்ளேயே கிசுகிசுத்து வருகின்றனர்.

தம்பிதுரை Vs கேபி.முனுசாமி என இரண்டு தனித்தனி ஆதரவாளர்களை அதிமுகவில் கொண்டுள்ளநிலையில் கேபி.முனுசாமி அவர்களுக்கு இணையாக உதவிகளை செய்ய முடியாவிட்டாலும் அவரின் ஆதரவாளரான பாலகிருஷ்ணா ரெட்டி வழங்கும் உதவிகளில் கூட பங்கேற்க மனமில்லையோ என ஒசூர் பகுதியினர் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்