ஹேக்கர்கள் ஊடுருவல்… வாட்ஸ்அப்பை உடனடி அப்டேட் பண்ணுங்க…!

ஹேக்கர்கள் ஊடுருவல்… வாட்ஸ்அப்பை உடனடி அப்டேட் பண்ணுங்க…!

வாஷிங்டன்:

வாட்ஸ்அப் செயலியில் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சிப்பதால், உடனடியாக வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்யும்படி உபயோகிப்பாளர்களை அந்த நிருவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்காணக்கானோர் பயன்பாட்டில் உள்ள செயலி வாட்ஸ்அப். இந்த செயலி, செய்திக, வீடியோ, புகைப்படங்களை பகிர்தல் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளை பகிரப்பட்டு மக்களிடையே ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால், வாட்ஸ் அப்பின் பாதுகாப்பு அம்சங்களில் அந்நிறுவனம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில், வாட்ஸ்அப்பில் ஹாக்கர்கள் ஊடுருவ முயற்சிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட சில பயனாளர்களை மட்டும் குறிவைத்து, இந்த தாக்குதல் நடைபெறுகிறது. ஹேக் செய்யப்பட வேண்டிய நபரின் செல்போனில் குறிப்பிட்ட சாப்ட்வேர் தானாகவே இன்ஸ்டால் ஆகும். பின்னர், அவர்களின் செல்போனில் உள்ள தகவல்கள் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என கூறப்பட்டுள்ளது.

இதனால், பயனாளர்களுக்கு அந்நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில், பயனர்கள் அனைவரும் உடனடியாக வாட்ஸ் அப்பை அப்டேட் செய்யவேண்டும் என்றும், புதிய வாட்ஸ் அப் அப்டேட்டில் பாதுக்காப்பு அம்சங்கள் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்