பேஸ்புக்கின் ‘லிப்ரா’ கரன்சி..! தெரிந்துகொள்வோம்..!!

பேஸ்புக்கின் ‘லிப்ரா’ கரன்சி..! தெரிந்துகொள்வோம்..!!

ரொக்கம், கடன் அட்டை மற்றும் வங்கி பணப்பரிமாற்றம் உள்ளிட்டவைகளுக்கு மாற்றாக கிரிப்டோ கரன்சி எனும் ‘லிப்ரா’ டிஜிட்டர் கரன்சியை உலகம் முழுவதும் சமூக வலைத்தளமான பேஸ்புக் அறிமுகப்படுத்த இருக்கிறது.

அடுத்த ஆண்டின் இடையில் அறிமுகப்படுத்தப்படும் இந்த ‘லிப்ரா’ டிஜிட்டர் கரன்சியை, உபேர், ஸ்பாடிபை, மாஸ்டர் கார்டு, ஈபே, வோடாபோன் உள்ளிட்ட 27 நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் ஆதரிக்கின்றன.

நீங்கள் பணத்தை செலவழிக்கும் முறையை இந்த பேஸ்புக் நிதி முறை மாற்றி தரும் விதமாக அமையும். போனில் மெசேஜ் அனுப்புவது போன்று பணப்பரிமாற்றத்தை இது சுலபமாக்கும். கையில் ஒரு ஸ்மார்ட் போனும், இணையதள வசதியும் இருந்தால் போதும் என்கிறது பேஸ்புக் நிறுவனம்.

இந்த ‘லிப்ரா’ டிஜிட்டல் பணத்தின் பரிமாற்றத்துக்கு சிறிய அளவிலான கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி கணக்கு இல்லாத 170 கோடி மக்களின் பணப்பரிமாற்றம் மேற்கொள்ள செய்யும் திட்டத்தை பற்றி இதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வெளியாகியுள்ள பிட்காயின் உள்ளிட்ட டிஜிட்டல் கரன்சிகளை ஆய்வு செய்துள்ளோம் எனவும், ‘லிப்ரா’ அதுபோன்று அவதூறாக செயல்படாது எனவும், உண்மையான சொத்துக்களை கொண்டு சுதந்திரமாக செயல்படும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்