சென்னைக்கு விற்ற திமிங்கலம்

சென்னைக்கு விற்ற திமிங்கலம்

ஒடிசா:

ஒடிசா மீனவர்களால் பிடிக்கப்பட்ட திமிங்கலத்தை சென்னை மருந்து நிறுவனத்துக்கு ரூ.8 லட்சத்துக்கு விற்கப்பட்டிருப்பதாக உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த செய்தியில், ஒடிசா மாநிலத்தின் பத்ராக் மாவட்டத்தில் உள்ள தம்ரா மீன்படி துறைமுகம் அருகே பிடிபட்ட திமிங்கல சுராவை படகில் வைத்திருக்கும் வீடியோ ஒன்று வைரலாகியது. இந்த திமிங்கல சுறா உயிருடன் இருந்ததாகவும், இதனை சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மருந்து நிறுவனத்துக்கு ரூ.7.49 லட்சத்திற்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் சிட்டா ரஞ்சன் சாகு கூறுகையில், இந்த வைரல் வீடியோவை உண்மை தன்மையை சரிபார்ப்பதாகவும், இந்த வீடியோ வெளியாகி 2 வாரங்களுக்கும் மேலாக இருக்கலாம். இதுகுறித்து எங்கள் அதிகாரிகள் மீனவர்களிடம் விசாரித்த போது, இந்த சம்பவத்திற்கு மறுப்பு தெரிவித்தனர் என்றும், திமிங்கல சுறாக்கள் பிடிபட்டால் மீண்டும் கடலுக்குள் விட்டுவிடுவோம் என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.

இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972ன் கீழ், இந்த திமிங்கல சுறாக்கல் பாதுகாக்கப்படுகின்றன. இது வங்காள விரிகுடா கடல் பகுதியில் சூடான இடங்களில் வாழ்கிறது. சுமார் 62 அடி நீளம் வரை வளரக்கூடியது. பாலூட்டியல்லாத முதுகெலும்புகளின் மிகப்பெரிய உயிரினமாகும். சுறா துடுப்புகள் சர்வதேச சந்தைகளில் அதிக விலை போகக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்