முதல் ஒரு நாள் போட்டி.. மழையால் தடை

  • In Sports
  • August 9, 2019
  • 178 Views
முதல் ஒரு நாள் போட்டி.. மழையால் தடை

கயானா:
இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதனை தொடர்ந்து ஒரு நாள் போட்டியில் பங்கேற்றுள்ளது.

இந்நிலையில், கயானாவில் முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். மழையால் போட்டி 34 ஓவர்களாக குறைக்கப்பட்டிருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்லும், லெவிஸீம் களமிறங்கினர். கிறிஸ் கெய்ல் 4 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அவுட்டானார்.

இதன் பின்னர் லெவிஸுடன் ஷாய் ஹோப் இணைந்தார். அந்த அணி, 13 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்தபோது மழை மீண்டும் குறுக்கிட்டது.

அப்போது லெவிஸ் 40 ரன்களுடன், ஷாய் ஹோப் 6 ரன்களுடன் களத்தில் இருந்தார். தொடர்ந்து மழை குறுக்கிட்டதால் ஆட்டத்தை நடுவர்கள் கைவிடுவதாக அறிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்