சூடுபிடிக்கும் தர்பூசணி விற்பனை

சூடுபிடிக்கும் தர்பூசணி விற்பனை

ஒசூர்:

ஒசூர் பகுதிகளில் கோடைக்கு முன்பே சூட்டெரிக்கும் வெயிலால் தர்பூசணி விற்பனை சூடுபிடித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் குட்டி இங்கிலாந்து என அனைவராலும் அழைக்கப்ப டுவதற்கான காரணம், குளிர்ந்த சீதோஷனம் நிலவுவதால் தான் என பலராலும் செ £ல்லப்படுகிறது.

ஒசூர் பகுதியில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் பனிப்பொழிவு அதிகரித்து குளிரால் பொதுமக்களும் சிரமப்படுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு பிப்ரவரி மாதம் முடிவதற்குள்ளாகவே பிப்ரவரி மாத தொட க்கத்திலேயே வெயில் சுட்டெரிக்கிறது.

குளிரில் இருந்த ஒசூர் வாசிகள், திடீர் வெயிலால் தங்களை காத்துக்கொள்ள குளிர்பானங்களை அருந்தி வந்தாலும், இயற்கையான தர்பூசணி பழங்களை வாங் குவதில் அதிக ஆர்வம் காட்டுவதால் தர்பூசணி விற்பனை சூடுபிடித்துள்ளது.

தற்போது தர்பூசணி வெட்டப்படாத முழுப்பழம் கிலோ 25 ரூபாய்க்கு விற்க்கப்பட்டு வருகிறது, தர்பூசணி அதிகப்படியான விளைச்சல் மார்ச் மாதங்களில் அறுவடை செய்வதால் தர்பூசணி விலை குறையும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்