குடிநீர் விநியோக அளவீடு; கண்காணிக்க குழு அமைப்பு: ஜல் ஜீவன் அமைச்சகம் நடவடிக்கை

குடிநீர் விநியோக அளவீடு; கண்காணிக்க குழு அமைப்பு: ஜல் ஜீவன் அமைச்சகம் நடவடிக்கை

கிராமப்புறங்களில் தண்ணீர் விநியோக அமைப்பின் அளவீடு மற்றும் கண்காணிப்புக்கான திட்டத்தைத் தயாரிக்க தேசிய நிபுணர்கள் குழு ஒன்றை தேசிய ஜல் ஜீவன் இயக்கம் அமைத்துள்ளது.

நாட்டின் எல்லைகளைத் தாண்டி உலகளாவியத் தேவைக்கு சேவைகளை அளிக்க விரும்பும் நிறுவனங்களுக்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தும் விதமாக, பல்வேறு ஆதரவு வசதிகளுடன் கூடிய உலகத்திலேயே மிகவும் துடிப்பான விஷயங்களின் இணையச் (IoT) சூழல் அமைப்பைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

பெரிய விளைவுகளை உண்டாக்கக்கூடிய இத்தகைய IoT தொழில்நுட்பங்களின் நன்மைகளை பல்வேறு துறைகளில் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் பல கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.தற்சார்பு பாரதம், டிஜிட்டல் இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா ஆகிய திட்டங்களின் பலன்களைப் பெறும் விதமாக, ஊரகப்பகுதிகளில் தண்ணீர் விநியோகச் சேவையின் அளவீடு மற்றும் கண்காணிப்புக்காக திறன்மிகு ஊரகத் தண்ணீர் விநியோகச் சூழலமைப்பு ஒன்றை ஜல் ஜீவன் இயக்கம் உருவாக்கவிருக்கிறது

கிராமப்புறங்களில் தண்ணீர் விநியோக அமைப்பின் அளவீடு மற்றும் கண்காணிப்புக்கான திட்டத்தைத் தயாரிக்க தேசிய நிபுணர்கள் குழு ஒன்றை தேசிய ஜல் ஜீவன் இயக்கம் அமைத்துள்ளது. கல்வி, நிர்வாகம், தொழில்நுட்பம் மற்றும தண்ணீர் விநியோகம் ஆகிய துறைகளின் திறன்மிக்கவர்களை உறுப்பினர்களாக கொண்டு இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்