வாஷிங்டன் நகரில் 1600 இராணுவம்: தீவிரமாகும் மக்கள் போராட்டம்

வாஷிங்டன் நகரில் 1600 இராணுவம்: தீவிரமாகும் மக்கள் போராட்டம்

அமெரிக்காவில் தலைநகர் வாஷிங்டன் பகுதியில் ராணுவத்தைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன்.

காவல்துறையினரால் கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த ஒரு வாரமாக அமெரிக்கா முழுவதும் போராட்டமும் வன்முறைகளும் தீவிரமடைந்து வருகின்றன.

பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள் நடைபெற்றுவருகின்றன. சில உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன.

ஏற்கெனவே, வெள்ளைமாளிகை எதிரே இருக்கும் தேவாலயத்துக்கு வந்து அதிபர் டொனால்ட் டிரம்ப் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சிக்காக, அந்தப் பகுதியில் திரண்டிருந்த போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டன.இந்த நிலையில் வாஷிங்டன் பகுதிக்கு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.

தேசிய தலைநகர்ப் பகுதியில் ராணுவ தளங்கள் இருக்கும் பகுதிகளில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர், வாஷிங்டனில் அல்ல என்று அறிக்கையொன்றில் பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் ராத் ஹாப்மன் தெரிவித்துள்ளார்.

“அதிஉயர் எச்சரிக்கை நிலையில்” ராணுவத்தினர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர், ஆனால், போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ராணுவத்தினருக்கு உதவவில்லை என்றும் ஹாப்மன் குறிப்பிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்