பாகலூர் அருகே பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் உணவு பொருட்களை வழங்கினார்

பாகலூர் அருகே பஞ்சாயத்து  வார்டு உறுப்பினர் உணவு பொருட்களை வழங்கினார்

ஒசூர் அடுத்த பாகலூர் அருகே ஊராட்சி வார்டு உறுப்பினர் நண்பர்களுடன் இனைந்து ஏழை எளியோருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை 7 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

7 நாட்களுக்கான அத்தியாவசிய தேவைபொருட்களை பொதுமக்கள் பெற்றிருந்தநிலையில் மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை திடீரென அமல்படுத்தியது.

இது சிறந்த நடவடிக்கை என்றாலும் நடுத்தர குடும்பத்தினரை பெரிதும் பாதித்திருப்பதால் ஏழை எளிய குடும்பங்களுக்கு சமூக ஆர்வலர்கள், நல் உள்ளம் கொண்டோர் என தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக ஒசூர் அடுத்த பெலத்தூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் வெங்கடசாமி கவுடா என்பவர் தனது நண்பர்களுடன் இனைந்து ஜீவாநகரில் உள்ள ஏழை எளியோருக்கும், குடிசை வாழ் குடும்பங்களுக்கும் அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

இதனை பெற்றுக்கொண்ட அவர்கள் வார்டு உறுப்பினர் வெங்கடசாமி அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்