ஓட்டு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு

ஓட்டு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு

ஒசூர்:

ஒசூர் பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டிக்கள், எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஒன்றியம் உட்பட 4 ஒன்றியங்களில் நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள், பாதுகாப்பு வளையத்திற்குள் எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 27 அன்று முதல்கட்டமாக ஒசூர்,தளி ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30அன்று சூளகிரி,கெலமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் என இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவுகள் நடைப்பெற்றன.

ஒசூர் ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சிகளில் பதிவான வாக்குகள், ஒசூர் அரசு கலைக்கல்லூரியிலும், தளி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் தளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சூளகிரி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கெலமங்கலம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் போடிச்சிப்பள்ளி பல்தொழில்நுட்ப கல்லூரியில் எண்ணப்பட இருக்கின்றன.

வாக்கு பெட்டிக்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் இரண்டு புறங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அறையின் பூட்டிற்கு சீலிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 20க்கும் மேற்ப்பட்ட அறைகளில் வாக்கு எண்ணப்பட்டு ஜனவரி 2அன்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

தற்போது வாக்கு எண்ணும் மையங்களில் போலிசாரும், ஜோனல் குழுவினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் எண்ணிக்கையின் போது நெரிசலை தடுக்கவும் தனித்தனியாக எண்ணவும் அனைத்து பணிகளும் செய்யப்பட்டுள்ளன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்