ஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்பு கேட்ட விவேக் ஓபராய்..!

  • In Cinema
  • May 21, 2019
  • 186 Views
ஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்பு கேட்ட விவேக் ஓபராய்..!

மும்பை:

ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்கையை சித்தரித்து மீம்ஸ் வெளியிட்டு விமர்சித்த விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டார்.

மக்களவை தேர்தல் முடிந்த நிலையில், கருத்துகணிப்பு வெளியானது. இதில் பா.ஜ., பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கிண்டலடிக்கும் வகையில், ஐஸ்வர்யாயின் தனிப்பட்ட வாழ்கையை மோசமாக சித்தரித்து மீம்ஸ் ஒன்றை வெளியிட்டிருந்தார் நடிகர் விவேக் ஓபராய்.

இந்த மீம்ஸ் விவகாரத்தில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியிருந்த நிலையில் விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சில நேரங்களில் யார் மனதையும் புண்படுத்தாது என்று ஒருவருக்கு தோன்றும் விஷயங்கள் சிலர் மனதை காயப்படுத்தும். நான் கடந்த 10 வருடங்களாக 2000-க்கும் அதிகமான ஆதரவற்ற பெண்களின் சுயமுன்னேற்றத்திற்காக பாடுபட்டுள்ளேன். நான் எந்த ஒரு பெண்ணையும் மரியாதைக்குறைவாக நடத்த வேண்டும் என்று நினைத்ததில்லை என தெரிவித்துள்ளார்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்