அக்டோபர் 9ல் விஷால் – அனிஷா திருமணம்!

  • In Cinema
  • May 11, 2019
  • 188 Views
அக்டோபர் 9ல் விஷால் – அனிஷா திருமணம்!

நடிகர் விஷாலுக்கும், ஐதராபாத் தொழிலதிபரின் மகளான அனிஷாவுக்கும் கடந்த மார்ச் மாதம் ஐதராபாத்தில் நிச்சியதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவர்களின் முக்கியமான நண்பர்களும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

திருமணத் தேதி மட்டும் அறிவிக்காத நிலையில், தற்போது அக்டோபர் 9ம் தேதி திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஷால், தன்னுடைய திருமணம் நடிகர் சங்க புதிய கட்டிடத்தில் அமையவிருக்கும் திருமண மண்டபத்தில் முதல் நிகழ்ச்சியாக நடைபெறும் என ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

தற்போது அக்டோபர் 9ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள் திருமண மண்டப பணிகள் முடிந்து விடும் என்று நடிகர் சங்க வட்டாரத்தில் கூறப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்