புதிய ஜெர்ஸியுடன் விராட் கோலி!

  • In Sports
  • June 29, 2019
  • 254 Views
புதிய ஜெர்ஸியுடன் விராட் கோலி!

லண்டன்:

புதிய ஜெர்ஸியுடன் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஒரே நிறத்தை பயன்படுத்தி இரு அணிகள் விளையாடுவதை தவிர்க்க ஐசிசி முடிவுசெய்துள்ளது. தற்போது நீல நிற ஜெர்ஸியை இங்கிலாந்து அணியும், இந்திய அணியும் பயன்படுத்தி வருகிறது.

இதில் இங்கிலாந்து அணிக்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், இந்திய அணிக்கு தற்போதைய நீல நிற ஜெர்ஸிக்கு பதிலாக, ஆரஞ்சு ஜெர்ஸி அறிமுகப்படுத்துவதாகவும், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஆரஞ்சு ஜெர்ஸியுடன் விளையாட உள்ளது. புதிய ஜெர்ஸியின் மாதிரி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது புதிய ஜெர்ஸியுடன் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்