‘‘தோனியின் ஆட்டம் மீது முழு நம்பிக்கை’’ – விராட் கோலி

  • In Sports
  • June 29, 2019
  • 198 Views
‘‘தோனியின் ஆட்டம் மீது முழு நம்பிக்கை’’ – விராட் கோலி

லண்டன்:

தோனியின் ஆட்டம் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

விராட் கோலி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், இத்தொடரில் இங்கிலாந்து தான் ஆதிக்கம் செலுத்தும் என நினைத்தோம். ஆனால் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சொந்தமண்ணில் இங்கிலாந்து அணி திணறுவது ஆச்சரியமாக உள்ளது என தெரிவித்தார்.

இந்திய அணியின் புதிய ஜெர்ஸி குறித்து கோலி கூறுகையில், எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஒரு போட்டியில் தான் இந்த ஜெர்சி அணிந்து விளையாடுவோம். இனிவரும் போட்டிகளிலும் இதே ஜெர்சி அணிந்து விளையாடுவோமா என்பது எனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தோனி குறித்து பேசும்போது, அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். நாங்கள் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். ஒன்றிரண்டு போட்டிகளை வைத்து அவரது திறமையை மதிப்பிட முடியாது என கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்