ரோஹித் சர்மாவுக்கு விராட் கோலி பாராட்டு!

  • In Sports
  • June 6, 2019
  • 215 Views
ரோஹித் சர்மாவுக்கு விராட் கோலி பாராட்டு!

லண்டன்:

இங்கிலாந்தில நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில், இந்திய அணியுடன் தென் ஆப்ரிக்கா அணி மோதின.

முதலில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு விளையாடியது. இந்திய அணிக்கு எதிரான இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து விளையாடி இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் 230 ரன்கள் குவித்து தென்னாப்ரிக்க அணியை தோற்கடித்தது.

இந்த போட்டியில், தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் விளையாடினர். ஆனால், தவான் 8 ரன்னிலும், கோலி 18 ரன்னிலும், ராகுல் 26 ரன்னிலும், டோனி 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஆனால் நிலைத்து நின்று விளையாடிய ரோஹித் சர்மா 122 ரன்னிலும், ஹர்த்திக் பாண்ட்யா 15 ரன்னிலும் அவுட் ஆகாமல் இருந்தனர். பந்து வீச்சுக்கு சாதகமான ஆடு களத்தில் ரோகித் சர்மா இந்த நிதான ஆட்டம் ரசிகர்களின் பாராட்டை பெரும் வகையில் இருந்தது.

இதுகுறித்து அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், எங்களை பொறுத்தவரை வெற்றியுடன் போட்டி தொடரை தொடங்கியிருப்பது முக்கியமானதாகும். இந்த போட்டியில் ரோஹித் சர்மா ஆட்டம் அற்புதமானது. அவரின் சிறந்த ஒருநாள் போட்டி இன்னிங்ஸ் இதுவாகும்

தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு நன்றாக இருந்ததால் பேட்டிங்கில் நாங்கள் கடினமாக உழைக்க வேண்டியது இருந்தது. ஆனால் ரோஹித் சர்மா ஆட்டம் மிக மிக சிறப்பானது என தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்