கிராமத்திலேயே 10ம் வகுப்பு முடித்த முதல் 3 பெண்கள்

கிராமத்திலேயே 10ம் வகுப்பு முடித்த முதல் 3 பெண்கள்

பலோடி:

ராஜஸ்தானில் கிராமத்திலேயே 10ம் வகுப்பு முடித்த முதல் 3 பெண்களுக்கு மாலை அணிவித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் பலோடி நகரத்திலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நூர் கி புர்ஜ் கிராம பஞ்சாயத்தின் பட்லா கிராமம். நூர் கி புர்ஜ் பஞ்சாயத்தில் உள்ள பள்ளி பூஜ்ய சேர்க்கை காரணமாக மூடப்பட்டது. இதனால் பட்லா கிராமத்தினர் படிப்பதற்கே மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர். இந்த கிராமத்தில் யாரும் சரியாக படிக்கக்கூட முடியவில்லை என கூறப்படுகிறது.

பட்லா கிராமத்தின் படிப்பதற்கு திறந்தவெளி பள்ளி இயங்கி வந்தது. கடந்த திங்கட் கிழமை இந்த திறந்தவெளி பள்ளியின் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில், பட்லா கிராமத்தில் 3 பெண்கள் 10ம் வகுப்பில் தேர்ச்சிபெற்றனர்.

தேர்ச்சி பெற்ற அமிரா, வச்சி மற்றும் ஹிரா ஆகியோரை கிராமத்தின் முதல் படிப்பறிவு மிக்கவராக கருதி அந்த கிராமத்தினர் அந்த பெண்களுக்கு மாலை அணிவித்து விழாவாக கொண்டாடினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்