மீண்டும் பாஜ.,வில் விஜயசாந்தி

  • In Cinema
  • September 28, 2019
  • 209 Views
மீண்டும் பாஜ.,வில் விஜயசாந்தி

சென்னை:

நடிகை விஜயசாந்தி மீண்டும் பாஜ.,வில் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை விஜயசாந்தி. இவர் கடந்த 1998ம் ஆண்டு பா.ஜ.,வில் இணைந்து, மகளிர் பிரிவு செயலாளராக பணியாற்றி வந்தார். பின்னர் பா.ஜ.விலிருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்தார்.

இதனைத்தொடர்ந்து, கடசி கலைக்கப்பட்டு தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சியுடன் இணைத்த அவர், பின்னர் காங்கிரசில் இணைந்தார்.

இந்நிலையில், பா.ஜ., கட்சியில் இணைய நடிகை விஜயசாந்தியுடன் கட்சி மேலிடத் தலைவர்கள் கடந்த 15 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதில் இறுதி முடிவை எட்டியுள்ளதாகவும், இந்நிலையில், டெல்லியில் பா.ஜ.,வின் முக்கிய தலைவர்களை சந்தித்து விஜயசாந்தி கட்சியில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்