கலவரத்தில் விஜய் ரசிகர்கள்

  • In Cinema
  • October 25, 2019
  • 247 Views
கலவரத்தில் விஜய் ரசிகர்கள்

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் ‘பிகில்’ படத்தின் சிறப்பு காட்சி வெளியிட தாமதமானதால் விஜய் ரசிகர்கள் சாலையில் கலவரத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் இன்று வெளியானது. இன்று காலை கிருஷ்ணகிரி திரையரங்கில் சிறப்பு காட்சிக்கு தாமதமானதால் விஜய் ரசிகர்கள் சாலையின் தடுப்புகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.

மேலும், திரையரங்கு மீது கற்களை எரிந்தும் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்