ஒசூர் அருகே மண்புழு உரம் தயாரித்து மாதம் 50 ஆயிரம் வருமானம் ஈட்டும் விவசாயி

ஒசூர் அருகே மண்புழு உரம் தயாரித்து மாதம் 50 ஆயிரம் வருமானம் ஈட்டும் விவசாயி

ஒசூர் அருகே வேலையில்லையே என அழைந்தவர் அரசு உதவியுடன் மண்புழு உரத்தை தயாரித்து வருவாய் ஈட்டி வருகிறார் 10 ஆம் வகுப்பு படித்த விவசாயி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த குந்துமாரணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஷேசாத்ரி, இவர் 10 ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றுள்ளநிலையில்

தனியார் நிறுவனங்களில் தினக்கூலியாக பணியாற்றி வந்ததை விரும்பாமல், கிருஷ்ணகிரி EDI அலுவலகத்தில் அரசு உதவியை கோரியபோது

மண்ணை சுத்திகரித்து இயற்கை விவசாயம் மேற்க்கொள்ளும் மண்புழு உரம் குறித்து 10 நாட்கள் பயிற்சியை இலவசமாக வழங்கியதுடன் பேருந்து கட்டண தொகையையும் வழங்கியதாக கூறுகிறார்

பின்னர் SBI வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் கடனுதவி பெற்று 4 தொட்டிகளில் மண்புழு உரம் தயாரிக்க ஆரம்பித்த இவர் தற்போது 60 தொட்டிகள் வரை மண்புழு உரத்தை தயார் செய்து, மன நிம்மதியுடன் வருவாயும் ஈட்டி வருகிறார்

இதுக்குறித்து ஷேசாத்ரி கூறுகையில்:

நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த மண்ணை சுத்தமாக அடுத்த தலைமுறைக்கும் கொடுக்க வேண்டும், படிப்பிற்கான வேலை இல்லையே என்பதை விட இயற்கையை நேசித்து விவசாயம் மேற்க்கொள்ள வேண்டுமென இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.

இரசாயன உரங்களினால் வருங்காலங்களில் மண் மலடியாகும் நிலை உள்ளது தற்போது ஆடு மாடு போமியம் கொண்டு பஞ்சகாவியம், ஜீவாமிருதம் பயன்படுத்தி

கால்நடைகளின் சானத்தை 90 நாட்கள் ஊர வைத்து மண்புழு உரம் தயாரிப்பதாகவும், பெட்ரோல் விரைவில் தீர்ந்துவிடும் என்பவர்கள்

நமது மண் கெமிக்கல்களினால் சாம்பலாகி விடும் என்பதை உணராமல் இருக்கின்றனர். ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்திட 4 டன் மண்புழு உரம் தேவை என்பதால்

கிராமங்கள் தோறும் மண்புழு உரத்திற்கு தேவை அதிகமாக உள்ளது, இளைஞர்கள் கிராமங்களிலேயே வேலை வாய்ப்பினை உருவாக்கி கொள்ள முடியும் என்கிறார்.

மேலும் இதுக்குறித்து அறிந்துக்கொள்ள கர்நாடக உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பல மாணவர்கள் வருவதாக பெருமைப்படும் இவர், மண்புழு உரத்தில் உற்ப்பதியாகும் காய்கறி, கீரை வகைகளுக்கு நல்ல லாபமும் கிடைக்கிறது என்கிறார்.

பட்டம் படித்து பறக்க ஆசைப்படுவதை விட, நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்ததை உரிமை என நினைக்காமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமை என நினைத்தால் மண் செழிக்கும் விவசாயம் பெருகும்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்