வேலூர் எம்.பி. யார்? ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது

வேலூர் எம்.பி. யார்? ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது

வேலூர்:
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் பதிவான வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

வேலூர் தொகுதியில் கடந்த 5ம் தேதி நடந்தது. மொத்தம் 1,553 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று 9ம் தேதி இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த பணியில் 800க்கும் அதிகமான அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தை சுற்றி 1000க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமு கூட்டணி சார்பில் ஏசி சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமி உள்பட மொத்தம் 28 பேர் போட்டியில் உள்ளனர்.

இதில் யார் எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று மதியம் 2 மணியளவில் தெரிந்து விடும்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்