வேலூர் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் ஓய்வு

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் ஓய்வு

வேலூர்:

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நாளை மறுநாள் (5ம் தேதி) தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உட்பட 28 பேர் போட்டியில் உள்ளனர்.

அ.தி.மு.க. சார்பில் பல்வேறு துறைகளை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் வெளியூரை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் வேலூர் மாவட்டத்தில் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

தி.மு.க.வில் வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வேலூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கடந்த 5ம் தேதி தொடங்கிய வேலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

வேலூர் தொகுதியில் தங்கியுள்ள வெளியூர் காரர்களை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
அதை மீறி தங்கியிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்