வேலூர் நாடாளுமன்ற தேர்தல்: இன்று வேட்புமனுதாக்கல்!

வேலூர் நாடாளுமன்ற தேர்தல்: இன்று வேட்புமனுதாக்கல்!

வேலூர்:

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதியின் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரத்திடம் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனுத்தாக்கல் செய்யலாம். வேட்புமனுதாக்கல் நடைபெறுவதையொட்டி ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்