வேலூரில் புதிய ரெக்கார்ட்.. ‘வாவ்’

வேலூரில் புதிய ரெக்கார்ட்.. ‘வாவ்’

வேலூர்:

வேலூரில் 110 ஆண்டுகளுக்குப்பின் தற்போது 166 மில்லி மீட்டர் பேய் மழை பெய்து நீரில் தத்தளித்து வருகிறது.

எப்போது வெயிலை வறுத்தெடுக்கும் வெயிலூர் என்ற பெயர் பெற்ற வேலூர் தற்போது கனமழை பெய்து ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த பேய் மழையால் மக்கள் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் விடுமுறை அளிக்கப்பட்டன.

கடந்த 1909ம் ஆண்டு இதே மாதமான ஆகஸ்ட்டில், 109 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது. கடந்த 110 ஆண்டுகளாக இந்த அளவுக்கு மழை பெய்யாத நிலையில், தற்போது 166 மில்லி மீட்டர் மழை பெய்து மக்களை வாட்டி வதைத்துள்ளது.

வேலூர் மாவட்ட மக்களும் எப்போதும் வெயிலிலேயே அவதிப்பட்டுவந்த நிலையில், கடந்த ஆண்டுகளாக போதிய மழை பெய்யாமல் விவசாயிகள் அவதிபட்டு வந்த நிலையிலும் தற்போது இந்த அளவுக்கு மழை பெய்தது ஒருபுறம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், வெள்ளக்காடாக மாறியதால் தற்போது இயல்பு நிலைக்கு மீள முயன்று வருகின்றனர்.

 

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையில் வேலூர் நகரின் காந்திநகர் தனியார் கல்லூரி ஒன்றில் வெள்ளம் புகுந்தது. மேலும், பழைய பேருந்து நிலையம், ராஜா தியேட்டர் சிக்னல், பைபாஸ் ரோடு, சிஎம்சி சாலை ஆகிய முக்கியமான பகுதிகளில் ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்போல் நீர் சூழ்ந்தது. இதனால் வானங்கள் செல்லமுடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதே மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே ஏலகிரியில் உள்ள ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியும் கட்டுக்கடங்காத ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

காட்டாற்று வெள்ளத்தால் ஆம்பூர் அருகே உள்ள பேர்ணாம்பட்டு சாலையில் மோட்டுக்கொள்ளை மற்றும் விண்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் மழை நீரை அப்புறப்படுத்தும் பணி தீவிரப்படுத்தினர்.

 

ஆம்பூர் அடுத்த மேல்மிட்டாளம் கிராமாத்தில் கோழிப்பண்ணைக்குள் வெள்ள நீர் புகுந்ததால், சுமார் 1,000 கோழிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன. மேலும் தோல் தொழிற்சாலையின் கழிவு நீர் வெள்ளத்தில் கலந்து செல்வதால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்