திருச்சி பேரணிக்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற திருமா

திருச்சி பேரணிக்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற திருமா

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வருகிற 22 ஆம் தேதியன்று திருச்சியில் மாபெரும்”தேசம் காப்போம்” பேரணி நடத்த திட்டமிடப்பட்டு விசிகவினர் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மண்டல வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேரணிக்கு ஆயத்தப்படுத்தி வரும் நிலையில்,

திருச்சியில் நடைபெற உள்ள தேசம்காப்போம் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அதை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் சிலையிலிருந்து உழவர் சந்தை வரை பேரணி நடத்திக்கொள்ளலாம், மாலை 2 மணியிலிருந்து 6 மணி வரை பேரணி நடத்திக் கொள்ளலாம், 10 மணி வரை பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்