பெங்களூரில் மற்றுமொரு “தேசம் காப்போம் பேரணி” – திருமா பங்கேற்பு

கர்நாடகாவில் தேசம் காப்போம் பேரணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அலைகடலென திரள அழைப்பு

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருச்சியில் நடத்திய தேசம் காப்போம் பேரணி இந்திய அளவில் பேசப்பட்ட நிலையில்

திருமாவளவன் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயல்பட்டு வரும் மாநிலங்கள் தோறும் மத்திய அரசை கண்டித்து தேசம் காப்போம் பேரணியை நடத்தப்படும் என அறிவிப்பு செய்து மாநிலங்கள் தோறும் தேதியை தேர்வு செய்துள்ளார்

அதன்ஒருபகுதியாக கர்நாடக மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மார்ச் 11 அன்று பெங்களூருவில் நடைப்பெறும் தேசம் காப்போம் பேரணியில் தொல்.திருமாவளவன் அவர்கள் பங்கேற்கிறார், அவருடன் பிரகாஷ் அம்பேத்கர் உள்ளிட்ட இஸ்லாமிய, தலித் அமைப்புக்கள் கலந்துக்கொள்ள இருக்கின்றன.

விசிகவின் கர்நாடக மாநில செயலாளர் தலித் நாகராஜன் தலைமையில் பெங்களூருவில் பத்திரிகையார்களை சந்தித்து பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்க இருப்பதாக பேசினார்.

பின்னர் பேட்டியளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன்:

பெங்களூருவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைப்பெறும் தேசிய காப்போம் பேரணியில் கர்நாடக மாநிலத்திற்கு அருகாமையில் உள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டத்தினர் கலந்துக்கொள்ள இருப்பதால் திருமா பங்கேற்கிறார் எனவே விடுதலைச் சிறுத்தைகள் அலைக்கடலென திரள அழைப்பு விடுத்தார்

இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விசிக கர்நாடக மாநில பொதுசெயலாளர் மூர்த்தி, துணை பொதுசெயலாளர் சேகர், மோகன்ராஜ், ராஜ லிங்கம் உள்ளிட்டோரும் இருந்தனர்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்