‘வாயு’ புயல் எச்சரிக்கை..! குஜராத்தில் 3.5 லட்சம் பேர் வெளியேற்றம்..!!

‘வாயு’ புயல் எச்சரிக்கை..! குஜராத்தில் 3.5 லட்சம் பேர் வெளியேற்றம்..!!

புதுடெல்லி:

அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. ‘வாயு’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், தீவிரமடைந்து வடக்கு நோக்கி நகர்ந்தது. அந்த புயல் குஜராத் கடற்கரையில் இருந்து 650 கிலோ மீட்டர் தூரத்தில் நேற்று மாலை நிலைக்கொண்டிருந்தது.

இன்று மேலும் தீவிரமடைந்து வருவதால், நாளை குஜராத்தின் போர்பந்தர் மற்றும் மகுவா கடற்கரை இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலால், 135 கிலோமீட்டருக்கும் மேல் சூறைக்காற்றும், இடி மின்னலுடன் பலித மழை செய்யும் எனவும், தாழ்வான பகுதிகளில் கடல் நீர் சூழ வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புயல் கரையை கடக்கும் போது 135 கிலோ மீட்டருக்கு மேல் பலத்த சூறைக்காற்று வீசும். இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடலோர பகுதிகளில் தாழ்வான இடங்களில் கடல் தண்ணீர் புகுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பானி புயல் ஒடிசா மாநிலத்தை தாக்கியதைப்போல், குஜராத்தில் 7 மாவட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. புயலை எதிர்கொள்வதற்காக ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழு, கடலோர காவல் படையினர் குஜராத்திற்கு விரைந்துள்ளன. கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் 9 மாவட்டங்களிலிருந்து சுமார் 3.5 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்ய குஜராத் அரசு இன்று காலை அதிரடி நடவடிக்கையை தொடங்கியது. இந்த 3 லட்சம் பேரும் சுமார் ஆயிரம் நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உணவு மற்றும் குடி தண்ணீர், மருந்துகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்