விஷாலுக்கு நடிகை வரலட்சுமி கண்டனம்..!

  • In Cinema
  • June 14, 2019
  • 211 Views
விஷாலுக்கு நடிகை வரலட்சுமி கண்டனம்..!

சென்னை:

நடிகர் சங்க தேர்தல் பிரச்சாரத்திற்காக விஷால் வெளியிட்ட வீடியோவுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 23ம் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் விஷால் தலைமையில் பாண்டவர் அணி போட்டியிடுகிறது. தேர்தல் பிரச்சாரம் செய்ய அந்த அணி நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில், முன்னாள் நிர்வாகிகள் நடிகர் ராதாரவி மற்றும் சரத்குமார் பற்றி ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பிறகு அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்ததாகவும், உங்கள் மீது வைத்திருந்த மரியாதை முற்றிலும் போய்விட்டது என நடிகை வரலட்சுமி சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்