ஸ்டாலினை நேரில் சந்தித்து வைரமுத்து வாழ்த்து..!

ஸ்டாலினை நேரில் சந்தித்து வைரமுத்து வாழ்த்து..!

சென்னை:

மக்களவைத் தேர்தலில் 38 இடங்களில் 37 இடங்களை பிடித்த திமுக கூட்டணி சாதனை படைத்துள்ளது. கலைஞரின் மறைவுக்கு பிறகு, திமுகவின் தலைவர் பொறுப்பேற்றதன் பின் முதன்முறையாக அமோக வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து மு.கஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக திகைப்புக்குரிய வெற்றி, திமுக வியப்புக்குரிய வெற்றி. திமுகவின் வெற்றி திராவிட இயக்க கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி என கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்